இடுகைகள்

சித்தர் அருளின்றி

 சித்தர் அருளின்றி...  சிவத்தை அடைய முடியாது..  சித்தர் வாக்கு சிவன் வாக்கு..  சித்தர் நாமம் சிவன் நாமம்... சித்தர்களின் மஹா...  சித்தர் அகத்தியமுனியை..  சிரம் தாழ்த்தி...  சிந்தை மகிழ வணங்குகிறேன்

சூரிய உதயத்திலிருந்து

  சரவோட்டம் இதுதான்  .......... சூரிய உதயத்திலிருந்து..  ஒரு நாழிகை தின ஒட்டம். இந்த ஒழுங்கில் ஓடணும்..  திங்கள் இடது சுவாசம்...! செவ்வாய் வலது சுவாசம்....!  புதன் இடது சுவாசம்...! வளர்பிறை வியாழன் இடது சுவாசம்.... ! தேய்பிறை வியாழன் வலது சுவாசம்.....!  வெள்ளி இடது சுவாசம்....! சனிக்கிழமை வலது சுவாசம்..... ! ஞாயிறு வலது சுவாசம்...! எதிராக ஓடினால்....  எதிரிகள் துன்பம்.... ! எதிர்பாப்புகள் தோல்வி..! எதிலும் போராட்டம்....  எல்லாம் தவிர்க்க...  சாரத்தை மாற்று....... !!! @ கவிப்புயல் இனியவன்

சரயோகம்

 சரயோகம்....  உடலுக்கு ஆலய... தரிசனத்துக்கு....  நிகரானது....... !!! உயிருக்கு  இறை  தரிசனத்துக்கு.....  நிகரானது....... !!! @ கவிப்புயல் இனியவன் 

வேண்டாம் வேண்டாம்

 வேண்டாம் வேண்டாம்  ......... இடது நாசி ஓடும் போது....  மருத்துவம் செய்ய வேண்டாம்...  மருந்து உண்ண வேண்டாம்...  ஆசீர்வாதம் பெற வேண்டாம்...  உணவு உண்ண வேண்டாம்....  உறக்கம் செய்ய வேண்டாம்...  அதிகாரியை சந்திக்க வேண்டாம்....  @ கவிப்புயல் இனியவன் 

செய்யாதே செய்யாதே

  செய்யாதே செய்யாதே  ............ வலது நாடி ஓடும் போது..! திருமணம் செய்யாதே...  திருமணபேச்சும் செய்யாதே... வேலைக்கு ஆளை அமர்த்தாதே....  சமாதானம் பேச செல்லாதே...  சூரியநாடி சுடும் நாடி..  அனைத்தும்..  கெட்டுவிடும்...... !!! @ கவிப்புயல் இனியவன்  யோகா கவிதை 

பஞ்சபூதமும் மனித குணமும்

  பஞ்சபூதமும் மனித குணமும்  ...... ​​ நிலத்தை நேசித்தால்..  பொறுமை ... ! நீரை நேசித்தால்... கருணை. .. ! நெருப்பை நேசித்தால்...  அன்பு ... ! காற்றை நேசித்தால்... அடக்கம் ... ! விண்ணை நேசித்தால்...  ஞானம் .... ! @ கவிப்புயல் இனியவன் 

பூதங்களும் உறுப்பும்

 பஞ்சபூதமும் மனித உறுப்பும்.... ....... நிலத்தை நேசித்தால்..  மண்ணீரல் வளமாகும்... ! நீரை நேசித்தால்... சிறுநீரகம் வளமாகும்.... ! நெருப்பை நேசித்தால்...  இருதயம் வளமாகும்... ! காற்றை நேசித்தால்... நுரையீரல் வளமாகும்... ! விண்ணை நேசித்தால்...  கல்லீரல் வளமாகும்.... ! @ கவிப்புயல் இனியவன் 

சரகலை யோகா -பஞ்சபூதம்

நிலத்தை நேசியுங்கள்...  வம்சம் விருத்தியாகும்....! நீரை நேசியுங்கள்...  செல்வம் விருத்தியாகும்.! நெருப்பை நேசியுங்கள்..  ஆரோக்கியம் விருத்தியாகும்... ! காற்றை நேசியுங்கள்...  ஆயுள் விருத்தியாகும்.. ! விண்ணை நேசியுங்கள்..  அறிவு விருத்தியாகும்... !!! @ கவிப்புயல் இனியவன்  03.12.2020

சரகலை யோகா கவிதை பிம்மமுகூர்த்த நேரம்

 புத்துணர்வான நேரம்...  குளிர்ச்சியான நேரம்...  இறைத்தன்மையான நேரம்...  பிராணசக்தி மேலோங்கிய நேரம்...  தியானத்துக்கான நேரம்..  வெற்றி கிடைக்கும் நேரம்...  திருமணத்துக்கான நேரம்...  யாகம் செய்யும் நேரம்...  சாதனைக்கான நேரம்...  கிரகதோஷம்அற்றநேரம்  அதுவே....  பிம்மமுகூர்த்த நேரம்... !!!

சரகலை யோகா கவிதை 01

 சரகலை என்பது மூச்சுக்கலை "சரம் " என்பது "மூச்சு"ஆகும். இந்த மூச்சு சூரியகலை, சந்திரகலை, சுழுமுனை, என்று நடைபெறும். இந்த ஓட்டத்தை  எம் விருப்பம் போல் மற்றும் பயிற்சியே சரகலை ஆகும். இதை ஒரு குரு மூலம் கற்பதே சிறந்தது. அடியேன் தமிழ்நாடு சித்த வைத்திய வித்தர் S. காந்தி என்பவரிடம் கற்றேன். இதில் என்ன பயன்?  என்று நீங்கள் கேட்டால். இன்றைய கொரோனா வுக்கு தற்பாதுகாப்பே இது தான்..  ....  பேச்சை குறை மூச்சை பிடி.. எல்லாம் வெற்றி.....  .... என்னால் முடிந்த அளவு சுருக்கமா இதை கவிதை வடிவில் முயற்சி செய்கிறேன். தொடர்ந்து  பாருங்கள்.....  கவிப்புயல் இனியவன் 

யோகா கவிதை தளம்

யோகா கவிதை  ...........  வலது மூச்சு.....  சூரிய கலை.... ! இடது மூச்சு....  சந்திர கலை.... ! இருதுவாரம்....  சுழுமுனை..... ! சூரிய கலையில்....  தியானம் செய்.... ! சந்திர கலையில்...  பயணம் செய்... ! சுழுமுனையில்....  அமைதியாக இரு.... !!! @ கவிப்புயல் இனியவன்

சத்தியம் சொல்லி விட்டேன்

சத்தியம் சொல்லி விட்டேன் ----- மன்னித்துவிடு இறைவா அவளுக்கு ஒரு சத்தியம் கொடுத்துவிட்டேன்....!!! இனி உன்னை காதலிக்க மாட்டேன் பின் தொடரமாட்டேன் .... உனக்கும் எனக்கும் எதுவுமே இல்லை என்று சத்தியம் சொல்லி விட்டேன் ஆனால்  இன்னுமும் இருக்கிறது என் இதயத்தில் அவள் நினைவுகள் ....!!!

உன்னை காயப்படுத்துகிறாய் ...?

துடித்துகொண்டிருப்பாய் ...!!! --------- உன்  பார்வையில் வேண்டுமானல்  நான் தெரியாமல்இருக்கலாம், உன் மனதில் நான் இல்லாமல் .... இருக்கலாம் ....!! ஆனால்  நெஞ்சுக்குள்ளே நீ தான் துடித்து கொண்டுக்கிறாய்..... துடித்துகொண்டிருப்பாய் ...!!! ------ உன்னை காயப்படுத்துகிறாய் ...? --------- உண்மையான நேசத்தை உணர மறுக்கும்.... மனது எளிதாக ஏமாந்து விடுகிறதே.... போலியான சில நஞ்சை கொண்ட நெஞ்சங்களுடன் ......!!! உன்....  அழகை போலவே......  உன் ..... அறிவையும்..... வியந்து இருந்தேன் ..... எதற்க்கா என்னை .... காய படுத்துவதாய் ... எண்ணி..... உன்னை காயப்படுத்துகிறாய் ...?

வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!!

வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!! ------ தினம் தினம் கவிதை எழுதுகிறாள்..... வரிகளால் மனதில் வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!! நான் செய்த தவறுக்காக தன்னை தண்டிக்கிறாள் உண்மையை சொன்னாலும் ஏற்க மறுக்கிறாள் ....!!! வலிகள் இருந்தும் நேசிக்கிறேன் அவளை ... அவள் என்னை சந்தேகிப்பதே என்னை எவரும் காதலித்துவிட கூடாது என்று பயப்பிடுகிறாள் ....!!!

இரவும் பகலும் துங்காமல் உழைப்பது

என்னைப்போல் எந்த நேரமும்  நிமிர்ந்து நிற்பவன் ...!!! எனக்கு பிராண வாயுவை  தந்து வாழவைப்பவன் ...!!! எனக்காக தினம்  தோறும் உணவு தருபவன்....!!!  தன்னையே அழித்து  ஒளியை தருபவன் ...!!! பச்சை நிறத்தை  பார்த்தால் கண்ணுக்கு  சிறப்பு என்பதற்காக  வைத்தியனாக இருப்பவன் ....!!! என் வீட்டு முத்தத்தை  அழகுபடுத்துபவன்....!!!  இரவும் பகலும் துங்காமல்  உழைப்பது இரண்டு.... ஒன்று என் இதயம்  மற்றையது என் மரம்....!!! 

ஒரு உயிர் தாய் தானே ...!!!

அத்தனையும் செய்யும் தாயே ....!!! ----- நீ என்ன தவறு செய்தாலும் .. யாருக்கும் சொல்லாமல் மறைப்பார்...!!! நீ கெட்டவனாக யார் சொன்னாலும் நம்பாமல் சொன்னவரை திட்டுபவார் ...!!! உன்னை வீட்டில் யாரும் வெளியேற்றினால் யாருக்கும் தெரியாமல் உணவு தருவார் ....!!! உனக்காக நோயாக இருந்தவர் -என்றாலும் உன்னை வெறுக்காதவர் ....!!! ஆறு பேர் நிற்கும் போது ஐந்து ரொட்டி இருந்தால் பசிக்க வில்லை என ஒதுங்குபவர் ...!!! இத்தனையும் செய்யகூடிய .... ஒரே ஒரு உயிர் தாய் தானே ...!!!

யாருக்கு விளங்கப்போகிறது ..?

யாருக்கு விளங்கப்போகிறது ..? ---------- பள்ளி காலத்தில் .... சுற்றுலா சென்றேன் கல்வி சுற்றுலாவாம் .....!!! சுற்றுலா பேரூந்தில் ஏறிய நிமிடத்தில் இருந்து உன்னை சுற்றிப்பர்ப்பது எனக்கு சுற்றுலா..... யாருக்கு விளங்கப்போகிறது ..? சுற்றுலா முடிந்தது .... அறிக்கை எழுத சொன்னால் ... உன்னை பற்றியே எழுதுவேன் ... மன்னித்துவிடு ....!!!

உன் முடிவை ....!!!

உன் முடிவை ....!!! ---------- இத்தனை நாட்களாய் ..  பழகிய நீ ...  இப்போது என்னை கண்டால்  முகத்தை திருப்புகிறாய்...?  தூரக்கண்டவுடன்  திரும்பி செல்லுகிறாய்..?  கிட்ட வந்தவுடன்  முறைத்து பார்க்கிறாய்  நண்பிகளுடன் செல்லும்  போது தெரியாதன்வன்  போல் செல்லுகிறாய் ...? மறக்க போகிறாயா ?  மறைக்கபோகிறாயா ...? எனக்கும் கற்று தா ... உன் முடிவை ....!!!

வலியால் துடிக்கிறது இதயம் ...!!!

வலியால் துடிக்கிறது இதயம் ...!!! ------------ அழுகிறேன் கதறுகிறேன் ... நடக்க போவது ஒன்றுமில்லை .... தெரிந்தும் அழுகிறேன் ..!!! நீ எனக்கு இல்லை .... உறுதியாக தெரிந்த பிறகும், உயிரோடு இருக்கிறேன் ........!!! உனக்காகவோ என்னக்காகவோ அல்ல உன்னோடு வாழ்ந்த அந்த நினைவுகளுக்காக ........!!! என் இடது இதய அறையில் ... பழைய நினைவுகள் ... என் வலது இதய அறையில் ... புதிய நினைவுகள் ..... வலியால் துடிக்கிறது இதயம் ...!!!

புரியாத காலம் ....!!!

பிறக்கும் போது அழுதேன் புரியாத காலம் ....!!! இறக்கும் போது அழுவார்கள் தெரியாதகாலம் .....!!! படிக்கும் போது அழுதேன் முடியாத காலம் .....!!! காதலின் போது அழுகிறேன் இன்பக்காலம் ....!!! காதல் பிரிவின்போது அழுதேன் இறந்த காலம் ...!!!