இடுகைகள்

சித்தர் அருளின்றி

 சித்தர் அருளின்றி...  சிவத்தை அடைய முடியாது..  சித்தர் வாக்கு சிவன் வாக்கு..  சித்தர் நாமம் சிவன் நாமம்... சித்தர்களின் மஹா...  சித்தர் அகத்தியமுனியை..  சிரம் தாழ்த்தி...  சிந்தை மகிழ வணங்குகிறேன்

சூரிய உதயத்திலிருந்து

  சரவோட்டம் இதுதான்  .......... சூரிய உதயத்திலிருந்து..  ஒரு நாழிகை தின ஒட்டம். இந்த ஒழுங்கில் ஓடணும்..  திங்கள் இடது சுவாசம்...! செவ்வாய் வலது சுவாசம்....!  புதன் இடது சுவாசம்...! வளர்பிறை வியாழன் இடது சுவாசம்.... ! தேய்பிறை வியாழன் வலது சுவாசம்.....!  வெள்ளி இடது சுவாசம்....! சனிக்கிழமை வலது சுவாசம்..... ! ஞாயிறு வலது சுவாசம்...! எதிராக ஓடினால்....  எதிரிகள் துன்பம்.... ! எதிர்பாப்புகள் தோல்வி..! எதிலும் போராட்டம்....  எல்லாம் தவிர்க்க...  சாரத்தை மாற்று....... !!! @ கவிப்புயல் இனியவன்

சரயோகம்

 சரயோகம்....  உடலுக்கு ஆலய... தரிசனத்துக்கு....  நிகரானது....... !!! உயிருக்கு  இறை  தரிசனத்துக்கு.....  நிகரானது....... !!! @ கவிப்புயல் இனியவன் 

வேண்டாம் வேண்டாம்

 வேண்டாம் வேண்டாம்  ......... இடது நாசி ஓடும் போது....  மருத்துவம் செய்ய வேண்டாம்...  மருந்து உண்ண வேண்டாம்...  ஆசீர்வாதம் பெற வேண்டாம்...  உணவு உண்ண வேண்டாம்....  உறக்கம் செய்ய வேண்டாம்...  அதிகாரியை சந்திக்க வேண்டாம்....  @ கவிப்புயல் இனியவன் 

செய்யாதே செய்யாதே

  செய்யாதே செய்யாதே  ............ வலது நாடி ஓடும் போது..! திருமணம் செய்யாதே...  திருமணபேச்சும் செய்யாதே... வேலைக்கு ஆளை அமர்த்தாதே....  சமாதானம் பேச செல்லாதே...  சூரியநாடி சுடும் நாடி..  அனைத்தும்..  கெட்டுவிடும்...... !!! @ கவிப்புயல் இனியவன்  யோகா கவிதை